காதலிக்க நேரமில்லை- விமர்சனம்

மாற்றுப்பார்வையில் ஒரு காதல் ஸ்டோரி

ஹீரோ மோகன் ரவி நித்யாமேனென் இருவரும் காதலர்கள். இதில் ரவிக்கு வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் வருகிறது. அதனால் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன்பிறகு திடீரென வேறோரு பெண்ணோடு தனிமையில் மோகன் ரவி இருக்கிறார். அதைக் கண்டதும் நித்யாமேனென் கொலைவெறி ஆகிறார். காதல் உடைகிறது. ஆண் துணையின்றி ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என மருத்துவத்தை நாடுகிறார் நித்யாமேனென். ஸ்பேம் டொனேஷன் பெற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தை பிறப்பதற்கு ஸ்பேம் டொனெட் பண்ணதே மோகன் ரவி தான் என்று தெரியவர, அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை

மோகன் ரவிக்கு பேர் சொல்லும்படியான ஒருபடம் என்பதில் மாற்றமில்லை. வெகு இயல்பாக நடித்து அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நித்யாமேனென் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. படத்தை தன் நடிப்பால் தாங்கிப்பிடிக்கிறார். இவர்களைத் தவிர்த்து படத்தில் வரும் மற்ற கேரக்டர்களும்.நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்

ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசையில் படத்திற்கு பெரிய எனர்ஜியைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவும் படத்திற்கு கனகச்சிதமாக அமைந்துள்ளது. எடிட்டர், ஆர்ட் டைரக்டர் முதல் டெக்னிக்கல் டீம் அனைவரும் தரமாக தங்கள் பணிகளைச் செய்துள்ளனர்

லைட்-ஆ எல்லை மீறினாலும் படத்தின் கதை மீது வேறு கலர் பூசப்பட்டுவிடும். அப்படியொரு கான்ட்ரவசியான கதை இது. ஆனால் இயக்குநர் கிருத்திகா உதயநிதி அதை வெகு சாமர்த்தியமாக, அதே சமயம் கமர்சியலாக கையாண்டுள்ளார். க்ளைமாக்ஸ் பின்பாதி இரண்டிலும் இன்னும் ஆழமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். மற்றபடி படம் okay watch தான்

காதலிக்க நேரமில்லை- மினிமம் கியாரண்டி
3/5

Actor jeyam raviActress Nithya MenonKadhalikka Neramillai movie