சிவபாலன் என்கிற அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் ‘காகித கப்பல்’

வர்கிரீன் இண்டர்நேஷனல் இண்டர் நேஷனல் சார்பில் பிதாமகன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காகித கப்பல்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தில்லிஜா என்கிற புதுமுக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ”பவர் ஸ்டார்” சீனிவாசன், பரோட்டா முருகேசன், “எலி ” புகழ் எலி ராஜன், மஞ்சப்பை ,வெண்ணிலா கபடி குழு” புகழ் ரமேஷ் மாணிக்கம், “முண்டாசுப்பட்டி ” புகழ் பூனை சூப் பாபு, “எங்க வீட்டு பிள்ளை” புகழ் ரத்னாவின் மகள் சுஜாதா நாயகியின் அம்மாவாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் சிவராமன்.எஸ்

9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன்.

படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை எப்படி “காகித கப்பல்” ஆகிறது என்பதே இப்படத்தின் கதையாம்.

AppukuttyKagitha KappalKagitha Kappal Movie NewsSiva Balanஅப்புகுட்டிகாகித கப்பல்சிவ பாலன்
Comments (0)
Add Comment