இடுப்புல என்னம்மா தாயத்து? : நிஜத்தில் பயமுறுத்தும் காஜல் அகர்வால்

பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகர், நடிகைகள் எந்த லெவலுக்கு செல்வார்கள் என்பது ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்தது தான்.
 
சில முன்னணி நாயகர்களும், நாயகிகளும் தங்கள் கைகளில் டஜன் கணக்கில் கலர் கலராக கயிறுகளை கட்டியிருப்பார்கள். அந்தளவுக்கு அவர்களின் நடவடிக்கை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருக்கும். சிலர் விநோதமான வடிவமைப்புடன் கூடிய ஆபரணங்களை தங்கள் கைகளில் அணிந்திருப்பார்கள்.

இருந்தாலும் இதுவரை கேள்விப்படாத அளவுக்கு ரொம்பவே அட்வான்ஸாகவும் அதே சமயத்தில் பயமுறுத்துகிற அளவுக்கும் போய் விட்டாராம் காஜல் அகர்வால்.

வயதாகிக் கொண்டே போவதால் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கிலும் காஜலுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டன.

அதையும் மீறி முன்னணி ஹீரோக்களின் ஒன்றிரெண்டு பட வாய்ப்புகள் தேடி வருவதால் தெம்பாக இருந்தவர் சமீபத்தில் தெலுங்கில் ரிலீசான ‘சர்தார் கப்பார் சிங்’ படம் அட்டர் பிளாப் ஆனதில் ஆடிப்போய் விட்டார்.

அந்தப் படத்தை வைத்து தான் தெலுங்கில் ஒரு ரவுண்டு வர நினைத்திருந்தார் காஜல். ஆனால் படம் கை கொடுக்காததால் நொந்தவர் உடனே மந்திரித்த தாயத்தை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டு உலா வருகிறாராம்.

பாடல் காட்சியில் இடுப்பு பிரதேசம் தெரியும் போது இந்த மந்திர தாயத்து சமாச்சாரம் கூட சேர்ந்து நடிக்கும் ஹீரோவுக்கு தெரிய வர, அவர்களே நடுங்கியபடி தான் ஆடுகிறார்களாம்.

Kajal AggarwalSardaar Gabbar Singh
Comments (0)
Add Comment