கள்ளன்- விமர்சனம்

பணத்திற்காக வேட்டையாடாமல் பசிக்காக வேட்டையாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாழும் ஹீரோ, ஒரு கட்டத்தில் மனிதர்களையே வேட்டையாடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டான் என்பதே கள்ளனின் கதை

இப்படத்தை எட்செட்ரா மதியழகன் பர்ஸ்ட் காபி அடிப்படையில் கரு.பழனியப்பனிடம் கொடுக்க, கரு பழனியப்பன் நடித்து தயாரித்திருக்கிறார்.. படமெங்கும் பட்ஜெட்டில் கடும் வறட்சி தெரிகிறது. கூடவே கரு.பழனியப்பன் நடிப்பிலும் ஏகப்பட்ட வறட்சி தெரிகிறது. ஒரு கள்ளன் எப்படி ஆகிருதியோடு இருக்க வேண்டும்!!! ஆன..கரு? தேமே என இருக்கிறார். உடல்மொழி முகமொழி எதிலுமே கம்பீரமில்லை..நடிகர் செளந்தரராஜா மட்டுமே படத்தில் நம்மை ஈர்க்கிறார். மற்றபடி யாரும் பெரிதாக சோபிக்கவில்லை

படத்தின் மேக்கிங்கில் பழையவாடை ரொம்பவே அடித்தாலும் நல்ல அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்ததில் இயக்குநர் சந்திரா ஜெயித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசை பாடல்கள் இரண்டும் படத்தை கரை சேர்க்க பெரிதும் உதவியிருக்கின்றன.
படத்தில் ஒளிப்பதிவாளர் இருப்பதை வைத்து சிறப்பு செய்ய முயன்றுள்ளார். கலை இயக்கத்திலும் வறுமை தெரிவது தான் வெறுமை

சுப்பிரமணியபுரம் போல ஒரு காத்திரமான கன்டெண்ட்..அதை இன்னும் கூட கவனத்தோடு கையாண்டிருக்கலாம்…கள்ளன் கவரவில்லை

2.5/5

director ChandraKallan MovieKaru PazhaniappanNikita