வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.
திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் பி.ராஜபாண்டி.
படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”வித்தியாசமான கதைக் களம் கொண்ட ‘கள்ள பார்ட்’ ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது. அரவிந்த்சாமி, ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்றார்.