கோடை கொண்டாட்டமாக வரும் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’

‘முனி காஞ்சனா’ 1, 2, படங்களின் பிரம்மாண்ட வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது பாகமாக சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் மிரட்டலான படம் தான் ‘முனி 4 காஞ்சனா 3’.

கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த கோடையை கொண்டாட குடும்ப படமாக ‘முனி 4 காஞ்சனா 3’ இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். காமெடியையும், கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்.

Kabir Duhan Singhkanchana 3Movie NewsRaghava LawrenceVedhika
Comments (0)
Add Comment