மறுபடியும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ஆள விடுங்க சாமி… : தெறித்து ஓடும் கஞ்சா கருப்பு!

கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதால் தமிழ்சினிமாவில் விழுந்து விட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.

அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார்.

தற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் இதோ இப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.

சரி.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக் கொள்கிறார்..

ஆமாம்.. பிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படி தான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ்.. அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறது தான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகண்ட்லேயே வெளியில தெரிஞ்சிடுமே..” என்கிறார்.

Bigg Bossbigg boss tamilkanja karuppu
Comments (0)
Add Comment