கெணத்த காணோம்- விமர்சனம்

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்களின் இறுதி படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம். அக்கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஊரின் கோவில் பூசாரியான யோகிபாபு வீட்டுமுன்பு தண்ணீர் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு கிணற்றை தோண்டுகிறார்கள். தண்ணீர் இருக்கும் என சொன்ன இடத்தில் ஒரு ஆச்சர்ய புதையல் இருக்கிறது. அதனால் ஊரில் பலரது வாழ்வும் கேள்விக்குறியாக நிற்க, அவற்றை எப்படி யோகிபாபு ஆச்சர்யக்குறியாக மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை

ஹீரோவாக யோகிபாபுவால் முழு அர்ப்பணிப்பை வழங்க இயலவில்லை. அதன்காரணம் அவரின் பல்வேறு கமிட்மெண்ட் என உணரமுடிகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமான நடிப்பை வழங்கியிருக்கலாம். லவ்லின் சந்திரசேகர் தன் காந்தக் கண்களால் நம்மை வசீகரிக்கிறார். அழகாக நடிக்கவும் செய்கிறார். ஏன் அவருக்கு பெரியபடங்கள் வருவதில்லையென தெரியவில்லை. ரேச்சல், ராமகிருஷ்ணன் உள்பட ஏனைய கேரக்டர்களும் ஒகே. நத்தை என்ற பெயரில் வரும் ஒரு பெரியவர், போர்போடுவதற்கு நிலம் பார்க்கும் ஒரு பெரியவர், கவிஞர் விக்ரமாதித்தியன் என பலரும் முத்திரைப்பதிக்கின்றனர்

படத்தின் இன்னொரு ஹீரோவாக பரிணமித்து அசத்தியுள்ளார் நிவாஸ் கே பிரசன்னா. தியாகராஜன் தனது தரமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். சில ப்ரேமிங்ஸ் அமேசிங்

முதல்பாதி சிறப்பாக நகரும் படம் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே டல் அடிக்கிறது. மெயின் கன்டெண்டிலிருந்து படம் விலகுவதும் மைனஸ். சிற்சில யூனிக்கான காட்சிகள், கேரக்டர்களை வைத்து பாதிக்கிணத்தை மட்டுமே தாண்டியுள்ளது படக்குழு! ஒருவேளை சுரேஷ் சங்கையா உயிரோடு இருந்திருந்தால் சில பிழைகள் திருத்தப்பட்டிருக்கலாம்
3/5

actor Yogi BabuKenatha Kanom movie