பெத்த செலவில் எடுக்கப்பட்ட பெத்தி வசூல் வேட்டையாடுமா?
2016-ல் விளையாட்டுத்துறையிலுள்ள ஒரு அதிகாரி ஒரு கிராமத்துச் சாலையில் வருகிறார். அங்கே பெத்தி என்பவனைப் பற்றிய சாகச கதைகளை கேட்கிறார். இதோ அந்த பெத்தியின் கதை!
கூலிக்கு காசு வாங்கிக்கொண்டு அட்டகாசமாக விளையாடும் கிரிக்கெட் ப்ளேயர் ராம்சரண் (பெத்தி) மலையடிவாரத்தில் தன் கிராம மக்களோடு கலந்துள்ள பெத்திக்கு தான் சாதி சார்ந்து அவமதிப்புள்ளாகிறோம் என்பது ஒரு கட்டத்தில் தெரியவருகிறது. மேலும் அந்தக் கிராமம் இருப்பது யாருக்கும் தெரியாது. கிராமத்திற்கு என்று எந்த அடையாளமும் கிடையாது. அதனால் ராம்சரண் ஒரு அடையாளத்தைப் பதிக்க நினைத்து, தன் கிராமத்திற்கு ஒரு வழிகாண முயற்சிக்கிறார். அவரின் முயற்சி வெற்றியடைந்ததா? என்பதே கதை
நடிகராக மாஸ் காட்டியுள்ளார் ராம்சரண். ஆக்சன் காட்சிகளில் அபாரமான உழைப்பைப் போட்டுள்ளார். ஆபத்தான காட்சிகளில் டூப் இன்றியும் நடித்துள்ளார். நாயகி ஜான்விக்கு நடிப்பைக் காட்டுவதை இடுப்பைக் காட்டுவதே வேலை! அதைச் சரியாகவும் செய்துள்ளார். சிவராஜ்குமார் கேரக்டரும் நச். அவர் நடிப்பும் நச். தன் ஊருக்கு ஒரு ரயில்நிலையம் வேண்டி போராடும் கேரக்டரில் ஜெகபதிபாபு வாழ்ந்துள்ளார்
ஏ.ஆர் ரஹ்மான் இசை ரொம்ப இரைச்சல். பாடல்களும் ஒகே ரகம் தான். ரத்னவேலு ஒளிப்பதிவில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். கலரிங் ஷாட் கம்போசிங் எல்லாம் மெஸ்மரிங்!
புஜ்ஜிபாபு சனா கதையாக ஒரு பாசிட்டிவ் ஐடியாவைப் பிடித்துள்ளார். ஆனால் திரைக்கதையில் மொத்தமாக சொதப்பியுள்ளார். லாஜிக் மேஜிக் இரண்டுமே மிஸ்ஸிங்! கூடவே படத்தின் நீளமும் சேர்ந்துகொண்டதால் பெத்தி நம்மை மொத்தி விட்டது
2.5/5