அமீர்கானிடமிருந்து அழைப்பு! – பிரஸ்மீட்டில் பார்த்திபன் குசும்பு

ஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கதை, இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தான் குப்பத்து ராஜா.

ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் இந்தவாரம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது.

அதையொட்டி நம்மை சந்தித்த படக்குழு படம் சம்பந்தமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, ” இந்தப்படத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது.

எல்லோரும் ஜிவி பிரகாஷ் இசை மாயஜாலாத்தை கண்டு பிரமித்து போவார்கள். ஆனால் அவரின் நடிப்பு திறனைப் பார்த்து வியந்தேன். பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பை அவர் மிக சாதாரணமாக வழங்கியதை நான் பார்த்தேன். கூடுதலாக, சண்டைக் காட்சிகளில் நிறைய முன்னேறியிருக்கிறார். இந்த படத்தில் அது குறித்து அதிகம் விவாதிக்கப்படும்” என்றார்.

சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்த்திபனுக்கு அவர் போனில் ஒரு அழைப்பு வந்தது. அதை அங்கேயே ஆன்செய்து பேசியவர் இந்த போனில் எந்த ரகசியமும் இல்லை. நான் நேற்று நடிகர் அமீர்கானுக்கு மெசேஜ் அனுப்பினேன்.

எப்போதுமே நான் மெசேஜ் அனுப்பிய பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு பதில் கொடுப்பார். அந்தமாதிரி இன்று போன் செய்கிறேன் என்று எனக்கு ஜப்பானிலிருந்து மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த கால் தான் இப்போது வந்தது. எதற்காக நான் அவரை தொடர்பு கொண்டேன் என்பதெல்லாம் விரைவில் ஒரு சுவாரஷ்யமான தகவலாக வரும் என்றார் சிரித்துக் கொண்டே…

‘குப்பத்து ராஜா’ பிரஸ்மீட்டில் பார்த்திபன் செய்த இந்த செல்போன் குசும்பு எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Aamir KhanGVPrakashKuppathu RajaParthiban
Comments (0)
Add Comment