மாமன்- விமர்சனம்

விக்ரமன் இயக்கத்தில் சூரி நடித்தபடம் என்று சொல்லுமளவில் ஒரு செண்டிமெண்ட் சினிமா

அக்கா என்றால் உயிர் என வாழும் சூரிக்கு அக்கா மகன் என்றால் உயிருக்கும் மேல். “அக்கா குடும்பம் மீதே இவ்வளவு பாசம் வச்சிருக்கானே.. அப்ப மனைவின்னா பயங்கர பாசக்காரனா இருப்பான்” என நம்பி சூரியைக் கரம்பிடிக்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி. But அவரின் நினைப்பில் இடி இறங்க..கணவன் மனைவி பிரிகிறார்கள். பாசத்தைக் காரணம் காட்டி பிரிந்த ஜோடி முடிவில் அதே பாசத்தால் இணைகிறார்கள். இவ்வளவு தான் மாமன்

சூரி பாசக்குழம்பாக படமெங்கும் கொதிக்கிறார். ஹீரோ மெட்டிரியல் என்பதால் ஒரு சண்டைக்காட்சியும் படத்தில் வைத்துள்ளார். நடிப்பில் வழக்கம் போல குறையில்லாமல் பார்த்துக்கொண்டார். சுவாசிகா அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஐஸ்வயா லெட்சுமியை அவர் சீண்டும் காட்சிகள் எல்லாம் அசத்தல். ஐஸ்வர்யா லெட்சுமி சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். சில இடங்களில் ஓவர் எமோஷ்னல் எட்டிப்பார்க்கிறது. பால சரவணன்,ராஜ்கிரண், கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் சின்னதாக அட்டனன்ஸ் போடுகிறார்கள். அந்தச் சின்னைப் பையன் கலக்கியிருக்கிறான்

பாடல்கள் படத்தில் கதையோடு ஒட்டி வந்துள்ளது. பின்னணி இசையும் ஒகே தான். ஒளிப்பதிவாளர் கச்சிதமாக ப்ரேமிங் வைத்துள்ளார். ஆங்காங்கே தெரியும் சீரியல் வாடைகளைக் கூட தன் கேமராவால் மறைக்க முயன்றுள்ளார்

படத்தின் கதை அரதப்பழசு என்றால் திரைக்கதை அதைவிட பழசு. பாசம் என்பதை எதார்த்தம் என்ற கட்டுக்குள் வைக்கவேண்டும். அதை விடுத்து பேக் எமோஷ்னலை படத்தில் ஓவராக அள்ளித்தெளித்தால் ஆடியன்ஸ் படத்தோடு கனெக்ட் ஆக மாட்டார்கள். மாமனில் அந்தத் தவறு அதிகமாகவே நடந்துள்ளது. மாமன் முதல்பாதியில் ரசிகர்களுக்கு சீர் செய்கிறார். இரண்டாம் பாதியில் நேரத்தை வீண் செய்கிறார்
2.5/5

Actor SooriActress Aishwarya Lekshmimaaman movie