அப்பா ஆடுகளம் நரேனிடம் கொடுத்தச் சத்தியத்தை மகன் விக்ரம் துறக்கிறார். பேரனான துருவ் விக்ரம் கடைபிடிக்கிறார். இருவருக்குள்ளேயும் வில்லனும் ஹீரோவும் இருக்கிறார்கள். முடிவில் யார் வென்றார்கள் என்பதே மகான் ஆட்டம். இடையே பாபிசிம்ஹா தான் இந்தக்கதைக்கு பாலமாய் இருக்கிறார்.
காந்தியம் என்பதை கடைப்பிடிப்பது வேறு, கடைபிடிக்காதவர்களை கருவறுப்பது வேறு. ஆக எதிலும் ஓர் அளவு வேண்டும் என்று மிக பொறுப்பாக ஒரு மேசேஜும் கொடுக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
படத்தில் பொறி பறக்க அசத்தியிருக்கிறார்கள் விக்ரமும் துருவ் விக்ரமும். இருவருக்குமான மீட்டிங் பாயிண்ட் சீன்கள் எல்லாமே கச்சிதமாக அமைந்துள்ளது. வில்லனிசம் கலந்து ஆக்ஷன் சீக்வென்ஸ்களில் துருவ் ஸ்கோர் செய்கிறார் என்றால், எமோஷ்னல் காட்சிகளில் விக்ரம் அசரடிக்கிறார். பாபிசிம்ஹா படத்தின் பெரும்பலம். அவரின் பாடிலாங்வேஜ் உணர்வுகளை வெளிக்கடத்தும் முகபாவனைகள் என எல்லாமே அட்டகாசம். சிம்ரன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்
படத்தில் பின்னணி இசை பெரிய மைனஸ்! நிறைய இடங்களில் வெறும் இரைச்சலை வைத்தே ஒப்பேற்றியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவாளர் பணியில் எந்தக்குறையும் இல்லை. விஷுவல் குவாலிட்டி சூப்பர்
படத்தின் பின்பாதியில் இருந்த சுறுசுறுப்பு முன்பாதியில் ஏகத்துக்கும் மிஸ்ஸிங். மூன்று மணி நேரத்தை நெருங்கும் அளவில் படத்தின் நீளம் இருப்பதால் முன்பாதியில் பல கொட்டாவிகளை கடக்கவேண்டியுள்ளது. கதாப்பாத்திரங்களோடு ஒன்றிப்போவதிலும் நமக்கு பெரும் சிக்கல் இருக்கிறது. எந்தத் தரப்பிலும் நியாயமும் எதார்த்தமும் இல்லாததால் மகானையும் மகனையும் எந்த இடத்தில் வைப்பது என்ற கேள்வி எழுகிறது. ஆயினும் படத்தில் ஒருசில Entertainment இருப்பதால் ஒருமுறை இந்த மகானைப் பார்க்கலாம்
2.5/5