மன்மதலீலை- விமர்சனம்

சின்னவீடு காலகட்டத்திற்கு முன்பே கொடிகட்டிப் பறந்த கதையை சின்ன பொடிவைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. மன்மதலீலை என்ற பெயரில் இருக்கும் சுவாரஸ்யம் படத்தில் இருக்கிறதா?

ஹீரோ அசோக்செல்வன், மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார். பெண்கள் என்றால் சபலம் தட்டும் குணம் அவருடையது. 2020-ல் இந்தக் கதை நடக்கும் போதே…2010-ல் அவர் செய்த இன்னொரு சம்பவம் காட்டப்படுகிறது. லைவ் 2020-லும் மனைவி மகள் ஊருக்குச் சென்றபிறகு ஒரு சம்பவத்திற்கு அடிபோடுகிறார் அசோக்செல்வன். இரண்டு சம்பவங்களையும் அவர் எப்படி அரங்கேற்றுகிறார்.. அதில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி வெளியேறினார் என்பதே படத்தின் கதை

அசோக்செல்வன் மிக இயல்பாக படத்தோடு பொருந்தியிருக்கிறார். ஸ்மிருதி வெங்கட் அசோக்செல்வனுக்கு நல்ல மனைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ் வுமன் இருவரும் இளைஞர்களை சூடேற்றும் வேலைகளை படத்தில் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் அவர் தாங்கியுள்ள கேரக்டரை அழகாகச் செய்துள்ளார். படத்தில் முக்கியமான கேரக்டர்கள் இவர்கள் மட்டுமே.. படத்தின் லொக்கேசனும் மூன்று வீடுகள் மட்டும் தான்.

பின்னணி இசையில் ஓரளவு படத்திற்கான டெம்போவை கொடுத்துள்ளார் ப்ரேம்ஜி. குறைந்த லோக்கேசன்கள் என்றாலும் ஒளிப்பதிவாளர் தனித்துத் தெரிகிறார். ஆர்ட் டைரக்டர் அசோக் செல்வன் வீட்டை பொருட்கள் மற்றும் உடைகளால் அழகுப்படுத்தியுள்ளார்.

ஒரு சிறிய கிரவுண்ட் கிடைத்தாலும் அதில் லாவகமாக சிக்ஸர் அடிக்க முயன்றுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. படத்தில் சிரிப்பை வர வைப்பதற்கான இடங்கள் நிறைய இருந்தும் குறைவான இடங்களில் மட்டுமே சிரிப்பை வர வைத்துள்ளார் இயக்குநர். முன்பாதியில் ஒரு A படத்திற்கான விறுவிறுப்பு ப்ளஸ் குறுகுறுப்பை கொடுத்துவிட்டு, இரண்டாம் பாதியில் சின்னதாக ஒரு திரில்லர் படத்திற்கான வெயிட்டேஜையும் கொடுத்துள்ளார் இயக்குநர். தவறு செய்தால் தண்டனை இருபக்கமும் கிடைக்க வேண்டும் என்ற விசயத்தை இயக்குநர் கண்டுகொள்ளாதது சின்ன உறுத்தல். மேலும் லாக்டவுனில் எடுக்கப்பட்ட படம் என்பதால் சின்ன அசட்டைத்தனம் அங்கங்கே தெரிகிறது. இருந்தாலும் 2k கிட்ஸ் என்சாய் பண்ணுவதற்கான வீக் என்ட் படம் இது

2.5/5

actor Ashok SelvanActress Samyuktha HegdeDirector Venkat PrabhuManmadha Leelai movie