மனிதம் பேசும் ராஜுமுருகனின் மற்றொரு படம் மைலார்ட்
கோவில்பட்டியில் வள்ளலார் வழியைப் பின்பற்றி வாழும் சசிகுமார் தன் மனைவி சைத்ராவோடு வறுமை நிலையிலிருக்கிறார். சைத்ராவிற்கு உடலில் ஒரு பிரச்சனை வருகிறது. அதைத் தீர்க்க பெரும்போராட்டத்தைச் சந்திக்கிறார் சசிகுமார். மேலும் கிட்னி பெயலியரிலிருக்கும் மத்திய அமைச்சர் ஆஷா சரத்திற்கு ஒரு கிட்னி தேவைப்படுகிறது. அவருக்கு மேட்ச் ஆன கிட்னி சசிகுமாரால் தான் தர முடியும் எனும் சூழல். இதற்கு அடுத்து நடக்கும் அதிரி புதிரி சம்பவங்கள் தான் படத்தின் கதை
சசிகுமார் கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ஒன்னும் தெரியாத ஆளாகவே அவர் நடித்து வருவது அலுப்பூட்டுகிறது. சைத்ரா ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கவிஞர் வசுமித்ரா, அறம் கோபிநயினார், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்
நீரவ்ஷாவின் கேமரா ராஜுமுருகனின் எண்ணங்களை நல்ல வண்ணங்ளாக்கித் தந்துள்ளது. ஷால் ரோல்டன் வழக்கம் பல நல்ல இசையை வழங்கியுள்ளார்..பாடல்களிலும் நல்ல மைலேஜ்
கிட்னி திருட்டுச் சம்பந்தப்பட்ட கதையை இன்னும் வெளிப்படையாக அணுகியிருக்கலாம். திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அதை மறைத்துள்ளனர் போலும். மேலும் நிறைய லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் துருத்தி நிற்கிறது. பருத்தி வெடிப்பைப் போல நச் என்று சொல்ல வேண்டியதை நமநமத்துப் போக வைத்துள்ளார் ராஜுமுருகன். க்ளைமாக்ஸில் பேசப்பட்டுள்ள கருத்திற்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம்
2.75/5