”ஒண்டிக்கட்ட”யாக வரும் இசையமைப்பாளர் பரணி!

ப்ரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் ”ஒண்டிக்கட்ட”.

”தெனாவட்டு”, ”குரங்கு கைல பூ மாலே”, ”எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் ’உச்சத்துல சிவா’, ’தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி, இசை – பரணி, பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா

தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி

இசையமைப்பாளர் பரணி எழுதி இயக்குனராக புது அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் உலகம் முழுவதும் வருகிற 20 ம் தேதி முதல் ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்கலாம்.

BharaniNehaaOndikatta MovieOndikatta Movie NewsVikram Jagathish
Comments (0)
Add Comment