காமெடியோடு நல்ல கருத்தையும் சொல்ல வரும் ‘பாலக்காட்டு மாதவன்’

‘நான் தான் பாலா’ படத்தை தொடர்ந்து விவேக் நாயகனாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன்.

அறிமுக இயக்குனர் சந்திரமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருக்க, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

காமெடிப் படம் என்றாலும் இப்படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறாராம் சந்திரமோகன். தற்போது ‘பாலக்காட்டு மாதவன்’ படம் வருகிற 26ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Palakkad MadhavanSonia AgarwalVivek
Comments (0)
Add Comment