பாம்பாட்டம் படத்தில் இளவரசியாக மல்லிகா ஷெராவத்!

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம்.

“நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

Actor JeevanActress Mallika SherawatActress Rithika SenPambattam movie