சொல்றது தான் கதை, சுடுறது தான் வடைன்னு முடிவெடுத்துட்ட பின் ஒரு படத்தின் அவுட்புட் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ப்ரின்ஸ்
பொறுப்பே இல்லாத பள்ளி ஆசிரியர் சிவகார்த்திகேயனுக்கு பொறுப்பான ஒரு வெள்ளைக்கார ஆசிரியை மேல் காதல். அந்தக்காதலுக்கு சில வில்லன்ஸ் தோன்ற..அதை எப்படி சிவா முறியடித்து காதலியை கரம் பிடித்தார் என்பதே தமிழ்சினிமாவில் 209786-முறைக்கு மேல் சொல்லப்பட்ட கதைகளின் வழிவந்த போன்ற கதை
இந்த மாதிரி கதையுள்ள படங்களில் சிவாவிற்கு நடிக்கவேண்டியதே இல்லை..பேசினாலே போதும். அவரும் அதையே தான் செய்கிறார். ஒரிரு இடங்களில் மட்டும் நன்றாக செய்கிறார். பிரிட்டிஸ் ஆசிரியையாக வரும் உக்ரைன் நாட்டு அழகி மரியா பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பு சுமாராக வருகிறது. சத்தியராஜ் ஓரளவு படத்தை தேற்றுகிறார். ஒரே காட்சியில் மட்டும் வரும் சூரி அதகளம் செய்துள்ளார். ஆனந்தராஜ் காமெடி காட்சியும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது/ எடுபட்டுள்ளது..
பின்னணி இசையில் ஏனோ தானோ என்ற அசால்ட் தென்படுகிறது. பிப்பாளாக்கி பிளாக்கி பாடல் நல்ல ரசனை. பிரமாதமான ஒளிப்பதிவு என்று எங்கேயும் சொல்ல முடியாது. ஏன் என்றால் நிறைய காட்சிகள் ஸ்ரைட்டிக்காக இருந்து சீரியல் Feel-ஐ கொடுக்கிறது.
முதல் இருபது நிமிடங்களை கடப்பதற்குள் நமக்கு பாலை வனத்தில் நடப்பது போன்ற வறட்சி ஏற்படுகிறது. நல்லவேளை அதன்பிறகு படம் சற்று சுவாரஸ்யமான ஏரியாவிற்குள் செல்கிறது. பின்பாதியில் சில இடங்களும், க்ளைமாக்ஸுமே ப்ரின்ஸை அதலபாதாளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்திற்கு ப்ரின்ஸ் கொஞ்சம் பரவாயில்லை என்று தான் படத்தின் ரிசல்டைச் சொல்ல வேண்டியதுள்ளது. மற்றபடி பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சிவா
2.5/5
#prince #ப்ரின்ஸ்