வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் K.N.R.ராஜா-விற்கும் தர்மபுரியை சேர்ந்த அனுஷா-விற்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், காதுகேளாதோர், ஊனமுற்றோர் மற்றும் பெரியவர்களும் அதிகளவில் இருந்தனர். அதே போல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்.இவர்கள் அனைவரையும் புதுமாப்பிள்ளை ராஜா வாகனம் வைத்து அழைத்து வந்து உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்.இந்த திருமணத்தில் நடிகர் ராதாரவி மற்றும் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கலந்துகொண்டார்கள்.