பியார் பிரேமா காதல் – விமர்சனம் #PyaarPremaKaadhal

RATING 2.7/5

நடித்தவர்கள் – ஹரீஸ் கல்யாண், ரைசா வில்சன், ஆனந்த் பாபு, ரேகா மற்றும் பலர்

இசை – யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா

இயக்கம் – இளன்

வகை – காதல், காமெடி

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 24 நிமிடங்கள்

ல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வெச்சுக்கிறது ரொம்ப தப்புன்னு நெனைக்கிற மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ.

”அதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது” என்று ‘ஜஸ்ட் லைக் தட்’ டாக கடந்து போகும் மேட்டுக்குடி மனோபாவம் கொண்ட ஹீரோயின்.

இவங்க ரெண்டு பேருக்குமிடையே ஏற்படும் நட்பு, காதல், மோதல் அதையொட்டிய சமாச்சாரங்களில் தொகுப்பே இந்த ‘பியார் பிரேமா காதல்’.

தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ ஹரீஸ் கல்யாண் அதே கம்பெனியில் வேலைக்கு சேரும் ரைசாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறார்.

 இருவருடைய அறிமுகமும் நட்பாக நாட்கள் போய்க்கொண்டிருக்கும் போதே இருவரும் ஒருநாள் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். மோகம் தீர்ந்த அடுத்த நிமிடம் ஐ லவ் யூ என்று ஹரீஸ் கல்யாண் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சியடைகிறார் ரைசா.

நமக்குள்ள இருக்கிறது வெறும் நட்பு மட்டும் தான். காதல் எல்லாம் இல்லை. இந்த செக்ஸ் மேட்டரையெல்லாம் கேசுவலா எடுத்துக்க என்று ஹரீஸூக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் ரைசா.

மிடில் கிளாஸ் ஹீரோ, மேட்டுக்குடி மனோபாவம் கொண்ட ஹீரோயின் என வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்த காதல் ஜோடி இல்லற வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அம்மாவை நல்லாப் பார்த்துக்கணும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஹரீஸ் கல்யாண் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும், ரைசா உடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒன்றிப்போய் ஸ்கோர் செய்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே எப்போது பார்த்தாலும் மேக்கப் போட்டுக் கொண்டு முகம் காட்டுபவர் ரைசா. அந்தப் பழக்கத்தை இந்தப் படத்திலும் விடவில்லை. அம்பூட்டு மேக்கப். கேமராமேன் தயவில் அழகாக ஜொலிக்கிறார்.

நடிப்பென்று வரும்போது ஹரீஸ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதிலும் முத்தக் காட்சி, பெட்ரூம் காட்சிகளில் இதெல்லாம் நடிப்பா, அல்லது நிஜமா என்று பார்ப்பவர்களை வாய்பிளக்க வைக்கிற அளவுக்கு ஹரீஸ் உடன் நெருக்கமோ நெருக்கம். நல்லா வருவேம்மா…

ஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்பவராக வரும் முனீஸ்காந்த். ரைசாவின் மாடர்ன் அப்பாவாக வரும் ஆனந்த்பாபு, ரேகா, சுப்பு பஞ்சு என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஹரீஸின் ஆபீஸ் நண்பராக வரும் ‘சதீஷ்’ சிறப்பு கவனம் பெறுகிறார்.

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பாடலை இசைக்கிறார் யுவன். அத்தனையும் மனசை லேசாக்கிச் செல்கின்றன.

திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துவது சரியா? திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது சரியா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இளவட்டங்கள் மத்தியில் பெரும் குழப்பமும், சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கிறது.

அதற்கான தீர்வை சொல்லாமல் அதை ரசிகர்கள் கையிலே விட்டு விட்டு கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கும் இயக்குனரின் இளனின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு பொக்கே!

 இளவட்டங்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குதூகலமான படம்!

Anand BabuElanHarish KalyanMovie ReviewPyaar Prema KaadhalPyaar Prema Kaadhal Movie ReviewPyaar Prema Kaadhal ReviewRaiza Wilsonrekhayuvan shankar raja
Comments (0)
Add Comment