அந்தப்படம் குறித்தான் எந்தத் தகவலும் பல மாதங்களாக வராத நிலையில், தற்போது அதன் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
‘முனி 3 – காஞ்சனா 2’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது. அதன் அடுத்த பாகமாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர மீதி காட்சிகள் முழுமையாக முடிவடைந்து விட்டது.
மிகப்பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள இப்படத்தின் மற்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, ஓவியா இணைந்து நடிக்கு இந்த ‘முனி – 4 காஞ்சனா – 3’ ஏப்ரல் மாதம் 18 ம் தேதி கோடை கொண்டாட்டமாக திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.