‘டேட்டிங்’ போதை! : ராணாவிடம் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்

‘பாகுபலி’ படம் ஹிட்டானதிலிருந்து தமிழ்ப் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ராணா. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும் மனுஷனை ‘டேட்டிங்’ சர்ச்சைகள் தான் விட்டபாடில்லை.

இவரும் த்ரிஷாவும் நெருக்கமாகப் பழகியது, பல பார்ட்டிகளில் ஜோடியாக ஆட்டம் போட்டதெல்லாம் இந்த உலகம் அறிந்தது தான். திடீர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இனி த்ரிஷாவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றிருந்த ராணாவைச் சுற்றி இப்போது புது ‘டேட்டிங்’ சமாச்சாரம் வர ஆரம்பித்திருக்கிறது.

அந்த சமாச்சாரத்தில் சிக்கியிருப்பவர் வேறு யாருமல்ல, தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் தலை காட்டிய ரகுல் ப்ரீத் சிங் தான்.

தமிழில் சரியான வாய்ப்பு அமையாமல் தெலுங்குக்கு போனவர் இப்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தான் ராணாவின் புதிய டேட்டிங் ப்ரெண்ட் என்று கிசுகிசுக்கிறது டோலிவுட் உலகம். ஆந்திராவில் பல இடங்களில், பல பார்ட்டிகளில் இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடிகிறதாம்.

அதுமட்டுமல்ல, ‘தனி ஒருவன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து ராம்சரண் நடிக்கிறார் இல்லையா?. அதில் ஹீரோயினாக நடிக்க ரகுலை ரெகமெண்ட் செய்ததே ராணா தானாம்.

இது ஒண்ணு போதாதா..? பத்திக்கிட்டு எரியுது தெலுங்கு திரையுலகம்!

Rakul Preet SinghRanaரகுல் ப்ரீத் சிங்ராணா
Comments (0)
Add Comment