‘ஆர் எக்ஸ் 100’ தமிழ் ரீமேக்கில் ஆதி!

‘மரகத நாணயம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஆதி.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ஆர் எக்ஸ் 100” என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தப்படம். இந்தப்படத்தை தமிழுக்காக வீரா நடிக்கும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’, அதர்வா ஹன்சிகா நடிக்கும் ‘100’ ஆகிய படங்களை தயாரித்து வரும் ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது.

“நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் தெலுங்கில் ‘ஆர் எக்ஸ் 100’ என்ற படம் ரிலீசானது. என்னை அழைத்து ஆதி அந்தப் படத்தை பார்க்க சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது.

தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது..” என்கிறார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

AdhiAuraa CinemasRX 100 MovieRX 100 remake
Comments (0)
Add Comment