சாமி 2 வுக்காக ஹரி போட்ட ப்ளான் : விக்ரமுடன் மோதுகிறார் பாபி சிம்ஹா!

விக்ரம் – த்ரிஷா நடிப்பில் மெகா ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையில் பிஸியாகியிருக்கிறார் இயக்குநர் ஹரி.

முதல் பாகத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்த வில்லன் கேரக்டரில் இரண்டாம் பாகத்தில் யாரைப் போட்டால் சரியாக இருக்கும் என்று யோசித்த ஹரி பாபி சிம்ஹாவை டிக் செய்திருக்கிறார்.

இதைப்பற்றி இயக்குநர் ஹரி கூறியதாவது.. ”விக்ரம் சார், ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்க வேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்.

சாமி படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி 2வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்.’ என்றார்.

சீயான் விக்ரம், பாபி சிம்ஹா இருவருமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதைப் பெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

bobby simhaSamy 2Samy 2 Movie NewsVikram
Comments (0)
Add Comment