ரொமான்ஸ் விஷயத்தில் சிபிராஜூக்கு கூச்சம்! : தைரியம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சினிமாவில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது அவ்வளவு எளிதல்ல. மீறி அமைந்தாலும் ரசிகர்களே கொண்டாடுகிற அளவுக்கு அட ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்குப்பா என்று சம்பந்தப்பட்டவர்களின் காதுபடவே கமெண்ட் அடித்து விட்டுப் போவார்கள்.

அப்படி ஒரு கெமிஸ்ட்ரி தான் ‘கட்டப்பாவை காணோம்’ படத்தில் அமைந்திருக்கிறது சிபிராஜூக்கும்- ஐஸ்வர்யா ராஜேஷூக்கும்!

வாஸ்து மீனைச்சுற்றிபின்னப்பட்டிருக்கும் இப்படத்தில் டூயட் பாடல்களில் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கட்டிப் புரண்டு சூடேற்றியிருக்கிறார்கள்.

காக்கா முட்டை நாயகியா இவர் என்று பார்ப்பவர்கள் வாய் பிளந்தாலும் இந்த ரொமான்ஸ் விஷயத்தில் சிபிராஜ் கூச்சப்பட்டது தான் ஹைலைட்.

இந்தப் படத்துல நானும் ஐஸ்வர்யா ராஜேஷும் சில சீன்கள்ல நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தது. இதுக்கு முன்னாடி என்னோட படங்கள்ல நான் இந்தளவுக்கு நெருக்கத்தோட நடிச்சதில்லை. அதனால் ரொமான்ஸ் காட்சிகள்ல ஐஸ்வர்யா ராஜேஷோட நெருக்கமான நடிக்க எனக்கு தயக்கமாகவே இருந்தது. அதனால கொஞ்சம் பட்டும் படமாலே நடிச்சேன். ஆனால் என்னோட தயக்கத்தைப் பார்த்துட்டு ஐஸ்வர்யா தான் கூச்சப்படாம நெருங்கி வாங்கன்னு தைரியம் கொடுத்தாங்க.

அதனால தான் நீங்க பாக்கிற காட்சிகள்ல ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கு என்றார் சிரித்துக் கொண்டே…

கட்டப்பா மகனுக்கு ரொமான்ஸூல கூச்சமா..? ஆச்சரியம் தான்.

Aishwarya RajeshKattappava KanomSibiraj
Comments (0)
Add Comment