’ரங்கா’ : ரஜினி பட டைட்டிலுக்கு சிபிராஜும் வந்தாச்சு!

மீபகாலமாக மெகா ஹிட்டான ரஜினியின் பழைய படங்களின் டைட்டிலில் இளம் ஹீரோக்கள் நடித்து வருகிறார்கள். அந்த வகையில்

”கட்டப்பாவ காணோம்” படத்துக்குப் பிறகு சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரங்கா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா தயாரிக்க, வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் சிபிக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அர்வி, எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் ராம்ஜீவன், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் சத்யா, டிசைனர் ட்யூனி ஜான், டான்ஸ் மாஸ்டர் விஜி என முழுக்க இளம் திறமையாளர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

”காக்கும் கடவுள் ரங்கநாதரை போல தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும், கஷ்டங்களை தாண்டி காக்கும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த படத்தின் நாயகன் ”ரங்கா.”

ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விஷூவல் ட்ரீட்டாகவும் இருக்கும். முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்து விட்டு வந்திருக்கிறோம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடக்க இருக்கிறது. முழுநீள ஆக்‌ஷன் திரில்லர் படமான இந்த ரங்காவில், இதுவரை நீங்கள் பார்த்திராத சிபிராஜை பார்ப்பீர்கள், அதற்கு நான் கேரண்டி என நம்பிக்கையோடு சொல்கிறார்” இயக்குனர் வினோத்.

Nikhila VimalRangaRanga Movie NewsSibiraj
Comments (0)
Add Comment