ரஜினி – தனுஷ் – அனிருத்துடன் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய செளந்தர்யா!

ஜினியின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 -ம் ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015- ம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி மகன் பிறந்தார். அவருக்கு ரஜினி வேத் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு செளந்தர்யா- அஸ்வின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

தற்போது மகன் வேத் உடன் அப்பா வீட்டில் தனியாக வசித்து வரும் செளந்தர்யா நேற்று மே 6-ம் தேதி தனது மகன் வேத்தின் இரண்டாவது பிறந்த நாளை

அப்பா ரஜினி – அம்மா லதா ரஜினிகாந்த் ஆகியோருடன் அவர்களது வீட்டில் கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் விழாவில் அக்கா ஐஸ்வர்யா, அவரது கணவரும் நடிகருமான தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Aniruthdhanush soundharya rajinikanth son ved birthdayLatha RajinikanthRajinikanthsoundharya rajinikanth
Comments (0)
Add Comment