மத்திய அரசால் வலிந்து திணிக்கப்பட்ட ‘நீட்’ மருத்துவத் தேர்வால் ‘பிளஸ் டூ ‘வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்தும் படிக்க வாய்ப்பு அமையாமல் இன்று தற்கொலை செய்து கொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா.
அவருடைய இந்த தற்கொலை தமிழக மக்களிடையே மட்டுமில்லாமல், உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் இந்த தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளிப்போடு எதிர்ப்புகளை பகிர்ந்து வருகிறார்கள்.
மாணவி அனிதாவின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருப்பதோடு, மத்திய மாநில அரசுகளுக்கு கடும் கண்டணங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்
மாணவி அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. எனது இரங்கலை அவரது குடும்பத்துக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கமல்ஹாசன்
எவ்வளவு பெரிய அவமானம் இது? இந்த விவகாரத்தில் உடனடியாக அந்த பெண் என்ன ஜாதி, மதம், எந்த ஊர் என்று பேச வேண்டாம். அனிதா என்னுடைய மகள் போன்றவள். அவரது பெயர் ஸ்ருதி, அக்ஷரா என்றிருந்தால் மட்டும்தான் நான் அவருக்காக வருத்தப்பட வேண்டுமா? மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
நீட் தேர்விற்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை. அங்கெல்லாம் வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் நேர்ந்த விபரீதம் இது. மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். கட்சி எல்லைகளை எல்லாம் தாண்டி இதில் செயல்பட வேண்டும். அனிதா உங்கள் மகள் போன்றவள். என் மகள் போன்றவள். மருத்துவ கனவுடன் வாழ்ந்த மாணவியை மண்ணோடு புதைத்து விட்டனர்.
மாணவி அனிதா +2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பார்த்தால் நாம் நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும்.
ஜி.வி. பிரகாஷ்குமார்
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா – இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதான் மரணம், அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.
விவேக்
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க ? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது.
ராகவா லாரன்ஸ்
அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி யோசிக்கவே வலிக்கிறது.
ஆர்ஜே. பாலாஜி
வெட்கமற்ற, தகுதியற்ற, ஊழல் தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஏழை மாணவர்கள் அவர்கள் கனவுகளைத் தியாகம் செய்வது மட்டுமல்லாமல் இப்போது வாழ்க்கையயைம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.
இயக்குனர் சேரன்
ஏழைகளின் சார்பில் கண்ணுக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரமாயிரம் கனவுகளை அரை நொடியில் அழித்தாயோ அனிதா…செங்கொடி வழி நீயோ.
இயக்குனர் தங்கர்பச்சான்
*அனிதா கேட்கிறார்!*
மாணவர்களின் குற்றமா ?
ஆட்சியாளர்களின் குற்றமா ?
தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா ?
மாணவர்களையா ?
நீதியைத் தரப் போவது யார்?
மனோபாலா
இது தற்கொலை அல்ல..கொலை..
இயக்குனர் சீனு ராமசாமி
டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.
இயக்குனர் பாண்டிராஜ்
Rip போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விசயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.
இயக்குனர் ராம்
நீட் ஒரு அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.
பாடலாசிரியை தாமரை
பல உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டிய சகோதரி, இன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டார். எவ்வளவு கனவுகள் நசுக்கப்பட்டிருக்கும்.
பாடலாசிரியர் விவேக்
மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவுடா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு ?.
இவர்களைத் தவிர இன்னும் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கல்களையும், மத்திய, மாநிலை கண்டனங்களையும்