தாய்கிழவி- விமர்சனம்

ஒரு மூட்டை விதைநெல் அளவிற்கு பில்டப் செய்யப்பட்ட தாய்கிழவி விளைச்சலைக் காட்டியதா?

மதுரையிலுள்ள ரூட்டட் கிராமம் ஒன்றில் வட்டிக்கு விட்டு தனி சர்வதிகாரி போல காலம் கழிக்கிறார் ராதிகா. அவரைக்கண்டாலே ஊர் நடுங்கும். அவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். திடீரென ஒருநாள் ராதிகா மரணப்படுக்கையில் விழுகிறார். ஊரே அவரது மரணத்தைக் கொண்டாட தயாராகிறது. ஆனால் அவர் உயிர் இழுத்துக்கொண்டிருக்கிறது. இச்சூழலில் அவர் நிறைய நகைகளை மறைத்து வைத்திருப்பதாக தெரியவருகிறது. ஆனால் ஆத்தாவை காப்பாற்ற மூன்று மகன்களும், ஒரு மருமகனும் துடிக்கிறார்கள்..ஆத்தா எழுந்தாரா இல்லையா என்பதே கதை

ஒன் வுமன் ஆர்மியாக படத்தில் பட்டாசு கிளப்பியுள்ளார். ராதிகா..அதே சமயம் அவர் முழுதுமில்லை..ஆனால் அவர்தான் கதை முழுதுமிருக்கிறார். முனிஷ்காந்த், பால சரவணன், சிங்கம்புலி, முத்துக்குமார் என இந்த நால்வர் அணி படத்தின் செகண்ட் ஹீரோக்கள் எனலாம்..நால்வரும் அசத்தியுள்ளனர். கமல் ரசிகராக சிங்கம்புலி காட்டும் ரவுசு எல்லாம் அடிப்பொலி. கருப்பசாமி விளக்கை காவல் காக்கும் ஒரு கேரக்டர், மூன்று மருமகள்கள் கேரக்டர் உள்பட குட்டிக்குட்டி கேரக்டர்களும் தரம். ஆகத்தரம். ரேச்சல் அட்டகாசமாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்

விஜய் விஜயகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தனிப்பதிவு. நம்மை மதுரை கிராமங்களுக்கே அழைத்துச் செல்கிறார் கேமராமேன். இசையமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா கிராமப்புற படத்திற்கான இசையை பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை வழியாகவும் கொடுத்துள்ளார்

படத்தின் கதையமைப்பு முழுக்க ரூட்டட் கிராமம் என்பதால் முன்பாதியில் வசனங்களை உள்வாங்க சற்று சிரமம் ஏற்படுகிறது. பின்பாதியில் தான் படம் தெளிவாக செல்கிறது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை படம் ஆழமாக பேசுகிறது. அதை வெகு இயல்பாக பேசியிருப்பதால் தாய்கிழவி முக்கியமான படமாகிறது.

3.5/5

Actress RadhikaDirector Sivakumar MurugesanThaaiKizhavi movie