“தலை நகரம் கொலை நகரம்” என படத்தில் அவர்களே பாட்டையும் வைத்துவிட்டதால் படத்தின் ரிசல்டையும் அவ்வரிகளோடே நாம் பொருத்திக் கொள்ள வேண்டியது தான்.
கதை?
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆக ஒட்டுமொத்த சென்னையையும் கன்ட்ரோல் பண்ணும் மூன்று டான்கள். அந்த டான்கள் வாழ்வில் ஏற்கனவே டானாக இருந்து ரிட்டையர்டு ஆகியுள்ள சுந்தர் சி குறுக்கிட விரிகிறது வில்லங்கம். அந்த வில்லங்கத்தை ஹீரோ லெப்ட் nand-ல ஹேண்டில் பண்ணுகிறார் என்பதே கதை. கதை, திரைக்கதையை கூட லெப்ட் ஹேண்டில் தான் ஹேண்டில் செய்துள்ளார்கள்
சுந்தர் சி ஷுட்டிங் விசிட் வரும் புரொடியூசர் மாதிரியே ரியாக்ட் செய்துள்ளார். ஒரு டானை கண்முன் நிறுத்தாமல் தவிக்கும் அவரது நடிப்பு ரசிகனை ரொம்பவே உறுத்துகிறது. பலாக் லால்வாணி, ஆயிரா ஆகிய இருவரும் ஹீரோயின்ஸ் கேட்டகிரியில் படத்தில் வந்தாலும் அவர்களின் கேரக்டர்கள் பெரிதாக எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மூன்று சென்னைகளின் மூன்று வில்லன்கள் மட்டும் கவனிக்க வைக்கும் நடிப்பை வழங்கியுள்ளனர்
ஜிப்ரானின் பின்னணி இசை பல பில்டப்களை வழங்கி சுமாரான காட்சிகளை சூப்பர் காட்சிகள் போல எலிவட் பண்ணி கொடுத்துள்ளது. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு நல்ல நேர்த்தியாக அமைந்துள்ளது
மூன்று வில்லன்களுக்கான பேக்ஸ்டோரி, அவர்களோடு சுந்தர் சி கனெக்ட் ஆகும் இடம், பரபரவென பறக்கும் காட்சிகள் என முன்பாதி படம் பக்காவாக ஸ்கோர் செய்கிறது. பின்பாதி அப்படியே ட்ராமாவாக மாறி எந்த லாஜிக்கும் இல்லாமல் திரைக்கதை இலகற்று பயணிக்கிறது. இதில் மூன்றாம் பாகத்திற்கான லீட்-ஐ கொடுத்து வேறு பயமுறுத்தி விட்டார்கள்
பிழை நகரம்
#Thalainagaram2 #தலைநகரம்2
2/5