ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்” திருக்குறள் “!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

IlaiyaraajaThirukkural Movie