பொல்லாத அரசியல்வாதி : எமனில் மிரட்டும் மம்பட்டியான் தியாகராஜன்!

‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி, ‘துருவங்கள் 16’ ரகுமான் என கோலிவுட்டின் சீனியர் ஹீரோக்கள் எல்லாம் மீண்டும் திரையில் வலுவாக காலூன்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சீனியர் ஹீரோக்களின் ஹிட் ரவுண்ட் வரிசையில் ”இவருக்கும் ஒரு இடத்தைப் போட்டு வையுங்கப்பா” என்று தியாகராஜனையும் கை காட்டி சொல்ல வைக்கும்படி தயாராகியிருக்கிறதாம் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் ‘எமன்’ படம்.

ஒரு பக்கம் மகன் பிரசாந்த்தை ஹீரோவாக வைத்து புதுப்படம் ஆரம்பிக்கிற வேலைகளில் பிஸியாக இருந்தாலும் நல்ல கதையம்சத்தோடு தன்னைத் தேடி வருகிற படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் அவ்வப்போது தோன்றி நடித்து வருகிறார் தியாகராஜன்.

அந்த வகையில் ‘வாய்மை’ படத்துக்குப் பிறகு ரிலீசாகும் ‘எமன்’ படம் தியாகராஜனை ரசிகர்கள் மத்தியில் வெறோரு கோணத்தில் காட்டும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

விஜய் ஆண்டனி ஹீரோ – தியாகராஜன் வில்லன் எப்படி அமைந்தது இந்த காம்பினேஷன்?

‘நான்’ படத்தின் ஹிந்தியில் ரீமேக் பண்றதுக்காக டைரக்டர் ஜீவா சங்கரையும், ஹீரோ விஜய் ஆண்டனியையும் மீட் பண்ணினேன். அப்பத்தான் ரெண்டு பேர் கூடவும் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. அந்த நட்புக்காகத்தான் ‘எமன்’ படத்துல என்னை நடிக்கக் கேட்டார் ஜீவா சங்கர்.

எமன் படத்துல வெள்ளை வேட்டி, சட்டைன்னு படத்துல ஒரு மூத்த அரசியல்வாதியாக வர்றேன். அந்தக் கேரக்டர் எனக்கே ரொம்பப் புதுசா இருந்துச்சு. உடனே ஒப்புக்கிட்டேன். என்று சொல்லும் தியாகராஜனுக்கு படத்தில் கேரக்டர் பெயர் கருணாகரனாம்.

பிசினஸ்ல ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும் ‘எமன்’ மாதிரி நல்ல கதைகள் என்னைத் தேடி வர்றப்ப மறுக்காக நடிக்க சம்மதம் சொல்லிடுவேன் என்று ஜீவா சங்கர் மாதிரியான திறமைசாலி இயக்குநர்களுக்கும் க்ரீன் சிக்னல் கொடுக்கிறார் தியாகராஜன்.

எமன் ரிலீசாகுது; எதுக்கும் தியாகராஜன் கிட்ட ஒரு கமிட்மெண்ட் போட்டு வெச்சுக்கங்க டைரக்டர்ஸ்!

Jeeva ShankarPrashanththiyagarajanVijay AntonyYamanYeman
Comments (0)
Add Comment