வீக் எண்ட் பார்ட்டி! : கண்டிஷன் போட்டு கொண்டாடும் த்ரிஷா?

‘போகி’, ‘நாயகி’, ‘கொடி’ என கைவசம் சில படங்களை வைத்திருக்கும் த்ரிஷாவுக்கு முன்பு போல கைக்கொள்ளா அளவுக்கெல்லாம் படங்கள் இல்லை. இதனால் முன்பை விட இப்போது அவருக்கு ஓய்வுக்கு அதிக நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

இதனால் அந்த பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தனது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்.

வீக் எண்ட்டில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் சென்னையில் இருக்க நேர்ந்தால், நேராக கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு சென்று விடுகிறார். சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் அங்கு தான் விடிய விடிய பார்ட்டி வைத்து நண்பர்களுடன் பொழுதை போக்குகிறாராம்.

இந்தப் பார்ட்டிக்கு தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கும் த்ரிஷா பார்ட்டிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷனையும் போடுகிறார்.

என்ன அது?

பார்ட்டியில் கலந்து கொள்ள வரும் எல்லோரும் மாடர்ன் உடையில் வர வேண்டும் என்பது தான் கண்டிஷன். அதையும் ஏற்றுக்கொண்டு பலரும் த்ரிஷாவின் பார்ட்டில் ஐக்கியமாகிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

வாழ்க்கை கொண்டாடுவதற்கே…

NayagiNayakiTrisha
Comments (0)
Add Comment