முட்டத்தில் படமாக்கப்பட்ட ”உள்குத்து!”

மிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் ‘உள்குத்து’.

அட்டக்கத்தி தினேஷ் – நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு.

ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஒருபுறம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் பெற்று வரும் உள்குத்து திரைப்படத்தின் ட்ரெய்லரை செப் 2-ம் தேதி இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட, மறுபுறம் உள்குத்து படத்தின் இசை வெளியீட்டு விழாவானது விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் உள்குத்து படத்தின் தயாரிப்பாளர் ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வகுமார், இணைத் தயாரிப்பாளர் ஜி விட்டல்குமார் , இயக்குனர் கார்த்திக் ராஜு, கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ், கதாநாயகி நந்திதா, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நடிகர்கள் ஸ்ரீமன், பால சரவணன், பாடலாசிரியர் கட்டளை ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

“உள்குத்து திரைப்படம் முழுவதும் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள ‘முட்டம்’ பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்து இயக்குனர் பாரதி ராஜா சாருக்கு பிறகு, முட்டம் பகுதியை நன்கு ஆராய்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்தியவர் இயக்குனர் கார்த்திக் ராஜு தான்.

கெனன்யா பிலிம்ஸின் ஜெ செல்வகுமார் சார் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் அனைத்தும் ரசிகர்களின் உள்ளத்தோடு பயணிக்க கூடியவை. அந்த வகையில் எங்களின் உள்குத்து திரைப்படமும் ரசிகர்களின் பாராட்டுகளை பெருமளவில் பெரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று கூறினார் நடிகர் ஸ்ரீமன்.

“உள்குத்து திரைப்படம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி கதாநாயகி நந்திதாவின் திரைப்பட வாழ்க்கையிலும் முக்கியமான மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன்… ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு… படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது…’ என்று நம்பிக்கையுடன் கூறினார் உள்குத்து படத்தின் கதாநாயகன் தினேஷ்.

“உள்குத்து திரைப்படம் மீனவர்களை சார்ந்து நகராது…மாறாக மீன் வெட்டும் தொழிலாளர்களை சார்ந்து நகரும்…அப்படி மீன் வெட்டும் தொழிலாளரான தினேஷின் உள்குத்து என்ன என்பதே எங்கள் உள்குத்து படத்தின் கதை… நிச்சயமாக பிற மொழிகளில் ரீமேக் செய்ய தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் எங்கள் உள்குத்து படத்திற்கு இருக்கிறது…” என்று அழுத்தமாக சொல்கிறார் உள்குத்து படத்தின் தயாரிப்பாளரும், கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெ செல்வகுமார்.

DineshNandita SwethaUlkuthUlkuthu Movie News
Comments (0)
Add Comment