அட்டகத்தி தினேஷின் ‘உள்குத்து’!

யாராகி வரும் படங்களில் ‘உள்குத்து’ பெரிதும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கார்த்திக் ராஜு இயக்க கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே .செல்வகுமார் தயாரிக்க ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஜி.விட்டல் குமார் இணை தயாரிப்பில் உருவாகும் ‘உள்குத்து’ வர்த்தக ரீதியாக, எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக இருக்கும் என்றுக் கணிக்க படுகிறது.

தினேஷுக்கு இணையாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் அவர்களோடு பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டிய நாடு’ சரத், திலீப் சுப்புராயன், மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

டைவிடாத படப்பிடிப்பை தொடர்ந்து ‘உள்குத்து’ இறுதிக் கட்ட பணிகளை எட்டிக் கொண்டு இருக்கிறது.

‘உள்குத்து’ கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு உள்ளது. கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும் படத்தின் வண்ணத்தையும், கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் படமாக இருக்கும்.

எனது முந்தைய படமான ‘திருடன் போலீஸ்’ ஏற்படுத்தி உள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும். என்று சொல்லும் தயாரிப்பாளர் ‘உள்குத்து’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் ரிலீசாகும் நாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

DineshUlkuthu Movie News
Comments (0)
Add Comment