சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு திரையில் அஜித்! ஆனால் அந்த அஜித்தை சுமார் என சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ஹெச். வினோத். இயக்குநர் வினோத்தின் புத்திசாலித்தனம் என்று எதுவும் இல்லாத வலிமையற்ற ஒரு கதையாக வலிமை கதை இருப்பது சோகத்திலும் சோகம்.
ரேஸ் பைக் இளைஞர்களை சட்டத்திற்கும் சமூகத்திற்கும் புறம்பான செயலில் ஈடுபடுத்துகிறார் வில்லன் கார்த்திகேயா. ஹீரோ அஜித் அந்த வில்லனை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே படம்.
அஜித் மிக ஷார்ப்பாக அசால்டாகவும் நடித்துள்ளார். அதேநேரம் சண்டைக்காட்சிகளில் எனர்ஜி இல்லாமல் இருக்கிறார். டல் மேக்கப்பும் அவருக்கு சோதனையாக அமைந்துள்ளது. அவரது “தல” கண்டினியூட்டி அநியாயத்திற்கு மிஸ்ஸிங். ஹுமா குரேஷி ஓரளவே ஈர்க்கிறார். மேலும் படத்தின் வில்லன் கார்த்திகேயா ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் அவரது கேரக்டரும் வீக் ஆகவே இருக்கிறது. அம்மாவாக சுமித்ரா கேரக்டரும் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக இல்லை
படத்தின் விஷுவலும் பைக் ரேஸ் காட்சிகளும் அபாரம். கேமராமேனின் மின்னல் வேக ப்ரேமிங் அட்டகாசம். எடிட்டிங்கில் நிறைய ஜம்மிங் தெரிகிறது. பின்னணி இசையில் ஜிப்ரான் சோபிக்கவில்லை. யுவன் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம்
சண்டைக்காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கும் லாஜிக் லூப்களுக்கும் கொடுத்திருந்தால் வலிமை நம்மை ஈர்த்திருக்கும்
2/5