இந்த இடம் நீங்கள் கொடுத்தது! : ரசிகர்களிடம் நெகிழ்ந்த விஜய் சேதுபதி

வெள்ளிக்கிழமை எத்தனை படங்கள் வந்தாலும் அதில் ஒன்று விஜய் சேதுபதி படமாகி விடுமோ? என்பது தான் கோடம்பாக்கம் ஆச்சரியத்துடன் பார்க்கும் பார்வை.

சென்ற வாரம் தான் ‘ஆண்டவன் கட்டளை’ ரிலீசானது. இதோ இன்னும் இரண்டு வாரங்களில் ‘றெக்க’ ரிலீசாகப் போகிறது.

ஆனால் இதெல்லாம் திட்டமிட்டு நடப்பதில்லை. வாரா வாரம் ஒரு படம் ரிலீசாகிற அளவுக்கெல்லாம் ஒரு ஹீரோ வேகவேகமாக படங்கள் நடித்து விட முடியாது. சில நேரங்களில் அப்படி அமைந்து விடுகிறது. என்று வெள்ளிக்கிழமை ரிலீசுக்கு ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே பதில் சொன்னார்.

விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க, ரத்தின சிவா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட, இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

விழாவில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசும் போது,

“இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்பப்பா.. செம்மயா இருக்கு. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி என்று விழா அரங்கின் மேலே இருந்த ரசிகர்களைப் பார்த்துச் சொன்னார்.

முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா? என்று பயந்தேன். முடியுமா என தயங்கினேன். ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனத்தை பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா என்னென்னவோ செய்தார். என்னைக் கவர்ந்தார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. இந்தக் கதை மேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன் வந்த கணேஷுக்கு நன்றி.

படத்தில் எதற்கும் கஷ்டப்படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது. இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார். லட்சுமி மேன்னுக்கும் நல்ல பாத்திரம்.

சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான் ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது. படக்குழுவினருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி. சத்தியமாக நிறைய்ய பேசத் தோன்றுகிறது ஆனால் பேச முடியவில்லை அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் விஜய் சேதுபதி.

Lakshmi MenonRekkaRekka Audio LaunchVijay Sethupathi
Comments (0)
Add Comment