ஆண்ட்ரியாவுடன் ரகசியத் திருமணமா? : மாலையும் கழுத்துமாக பரபரப்பை கிளப்பிய விஷால்!

டந்த சில ஆண்டுகளாகவே நடிகை வரலட்சுமியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியாவுடன் விஷால் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து விசாரித்ததில் அது திருமணம் அல்ல என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் சூட்டிங் சிதம்பரம் அருகே நடைபெற்று வருகிறதல்லவா? அங்கு மகா சிவராத்திரியையொட்டி நடிகை ஆண்ட்ரியாவைக் கூட்டிக் கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சென்றிருக்கிறார் விஷால். அங்கு எந்த விருந்தினர்கள் வந்தாலும் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

அதுபோலவே இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் கோவிலை சுற்றி வந்துள்ளனர். அதை நேரில் பார்த்த குறும்புக் கார ரசிகர்கள் விஷால் வரலட்சுமியை விட்டு விட்டு ஆண்ட்ரியாவை திருமணம் செய்து விட்டார் என்று பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

விஷாலை வெச்சு செய்றதுல அம்பூட்டு சந்தோஷமாய்யா..?

AndreaVaraLakshmivishalvishal - andrea secret marraigevishal marraige
Comments (0)
Add Comment