Web- விமர்சனம்

நட்டியும் நான்கு குட்டிகளும் என வெப் படத்தைப் பற்றி ஒரு பன்ச் அடித்தார் பத்திரிகையாளர் வேணுஜி. கூடவே சில புட்டிகளையும் சேர்த்துக்கொண்டால் அதுதான் வெப் படம்

ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் உள்பட அவரது கேங்கில் உள்ள இரு லேடிஸும் பப்பு மப்பு என சுத்துகிறார்கள். ஐடி லேடிஸ்களான அவர்களை நட்டி ஒரு கட்டத்தில் கடத்துகிறார். அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள். அவர் ஏன் கடத்தினார் என்பதே படத்தின் கதை

நட்டி குட்டிகளை கையாளும் காட்சிகளில் வில்லத்தனம் காட்டியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுத்துள்ள இன்னொரு பரிணாமம் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நம் இதயங்களை நடிப்பால் கொள்ளை கொண்ட ஷில்பா மஞ்சுநாத் இப்படத்தில் மிகவும் டல்லாகவே வருகிறார். டல்லாகவே நடித்துள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள யாரும் பெரியாத ஜொலிக்கவில்லை

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பயங்கர ஏமாற்றம். வெறும் இணையத்தில் உள்ள இசை துணுக்குகளை அள்ளிப்போட்டு படத்தில் சொருகியுள்ளார். மேக்கிங்கிலும் கேமராமேன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்

திரைக்கதையில் சில நல்ல முயற்சிகளை செய்துள்ளார் அறிமுக இயக்குநர் ஹாரூண். லாஜிக் கேள்விகள் ஆங்காங்கே துருத்தி நிற்பது பலவீனம். படம் சொல்ல வரும் மெசேஜ் மிகவும் வலிமையானது என்ற ஒற்றை காரணம் மட்டுமே வெப் படத்தை குறைகளைத் தாண்டி ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

வெப்- பெரிதாக தப்பு இல்லை
2.5/5

Actor Natty Natrajdirector haroonweb movie