கென் கருணாஸின் இயக்கம் ஒகே வா? நடிப்பு ஒகே வா?
பலத்த எதிர்பார்ப்பை கிளப்பிய யூத் படத்தின் கதையை சிம்பிளாக பார்த்திடலாம். காலம் 2014! 10Th படிக்கும் ஹீரோ கென் கருணாஸுக்கு காதலில் வெற்றிபெற வேண்டும் என்பதே இலக்கு. ஆனால் பெண்கள் அவரை நிராகரித்தபடியே இருக்கிறார்கள். திடீரென இருபெண்கள் அவரை ஒரே நேரத்தில் காதலிக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு நோ சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது. என்ன முடிவெடுத்தார் ஹீரோ என்பது மீதிக்கதை
ஹீரோவாக கென் ஒகே அல்ல..டபுள் ஒகே. சிறப்பான ஹீரோ மெட்டிரியலாக லான்ச் ஆகியுள்ளார். குறிப்பாக டான்ஸில் அசத்துகிறார். வாழ்த்துகள். நாயகிகள் அனிஷ்கா அனில்குமார் நம் மனதை சிறையெடுக்கிறார். மீதமுள்ள இருநாயகிகளான, மீனாக்ஷி, பிரியான்ஷி இருவருமே நல்ல தேர்வு. தரமாக நடித்துள்ளனர். ஹீரோயின்களை விட படத்தில் அதிக ஸ்கோர் செய்தது, கென்னின் அப்பா அம்மாவாக வரும் தேவதர்ஷினியும் மலையாள நடிகர் சுராஜும் தான். அமர்க்களப்படுத்தி விட்டனர். கென் நண்பர்கள்& எதிரிகளாக வரும் எல்லா டீன் ஏஜ் பசங்களும் அடிதூள்!
ஜிவி பிரகாஷ் தன் பாடல்களால் படத்திற்கு ஓப்பனிங் கொடுத்தது போலவே தனது பின்னணி இசையால் படத்திற்கு பெரிய வேல்யூ-வை கொடுத்துள்ளார். விக்கியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது
படம் துவங்கி முதல் 45 நிமிடங்கள் நம்மை வச்சு செய்துவிட்டார்கள். நல்லவேளையாக அதன்பின் சற்று ட்ராக் மாறி படம் பாசிட்டிவ் பாதைக்குச் செல்கிறது. தாய் தந்தை குறித்து க்ளைமாக்ஸில் பதிவு செய்தது விசயம் சூப்பர். மற்றபடி ஆகா ஓகோ படம் இல்லை என்றாலும் நிச்சயமாக ஒருமுறை விசிட் அடிக்கும் படமாக அமைந்துள்ளது இந்த யூத்
3/5