அவள் பெயர் ரஜ்னி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தப்பறிந்து துப்பறியும் கதை

ஹீரோவின் அக்கா கணவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் என விசாரணையை ஆரம்பிக்கிறார் காவல் அதிகாரி அஷ்வின் கே குமார். அவரின் விசாரணையில் கிடைக்கும் தகவல்களும், ஹீரோ காளிதாஸ் தனியாக கண்டுபுடிக்கும் தகவல்களும் எப்படி ஒன்றிணைந்து குற்றவாளியை நெருங்கிப் பிடிக்கிறது என்பதே கதை

காளிதாஸ் நடிப்பை பெரிதாக எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இந்தப்படத்தில் அவர் ஹீரோவாக இருந்தாலும் கதை முழுதுமாக அவர் மீது பயணிக்கவில்லை. ஆதலால் அவர் கேரக்டர் சோபிக்கவில்லை. காவல் அதிகாரியாக அஷ்வின் கே குமார் இன்னொரு நாயகன் போல அசத்தியுள்ளார். நமிதா ப்ரமோத் கேரக்டர் ஓகே ரகம். ரெபா மோனிகா நடிப்பு நச் ரகம். கருணாகரன் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு சின்னதாக கியாரண்டி கொடுக்கலாம்.

இசையால் கதை நகரவேண்டிய தேவை இப்படத்திற்கு உண்டு. அதை உணர்ந்து உழைத்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர் விஷ்ணு ப்ளாஸ்பேக் காட்சியில் நல்ல மைலேஜ் கொடுத்து உழைத்துள்ளார்.

கதையாக ஒரு பழிவாங்கல் கதை என சுருக்கினாலும், திரைக்கதையில் நல்ல ஐடியாக்களை தூவியுள்ளார் இயக்குநர்.
குற்றம் செய்தவர் மீதுள்ள குறைகள் பெரிதாக காட்டப்பட்டு அவருக்கான நியாயத்தைச் சரியாக கன்வே செய்யவில்லை இயக்குநர். அந்த இடத்தில் படம் அறத்திற்கு அப்பார்ப்பட்டு நிற்கிறது. க்ளைமாக்ஸ் மற்றும் சொல்லப்பட்ட தீர்வு இரண்டிலும் கூடுதல் அக்கறை காட்டியிருக்கலாம்

அவள் பெயர் ரஜ்னி மாஸுமில்லை..
லாஸுமில்லை
2.75/5