இளம் விஞ்ஞானிகளைக் கௌரவித்த ‘ஆஹா’ டிஜிட்டல் தளம்!

ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி-யில் வெளியான ஐங்கரனின் டிஜிட்டல் பிரீமியர் கொண்டாட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் திறமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். பல எதிர்பார்ப்புகளுடன் ஜூன் 10-ஆம் தேதி ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி தளத்தில் வெளியான ‘ஐங்கரன்’, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இளம் விஞ்ஞானியை மையப்படுத்தி உருவாகி வெற்றி பெற்ற ‘ஐங்கரன்’ திரைப்படம், கடந்த வாரம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த படத்தின் கதையை போன்று தமிழகத்தில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து, நேரில் வரவழைத்து, ஐங்கரன் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்ட ஆஹா டிஜிட்டல் குழுமம் பாராட்டி, பரிசளித்து கௌரவித்தது.