பிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்

இந்த வருடத்தின் துவக்கம் பேட்ட விஸ்வாசம் என்ற படங்களின் போட்டியோடு அமைந்தது. அதேபோல் இந்த வருடத்தின் முடிவு பிகில் கைதி படங்களின் போட்டியோடு முடியும் போல் தெரிகிறது. நேற்றைய மாலை மழையை விட அதிகமாகப் பேசப்பட்டது பிகிலும் கைதியும் வரும் 25-ஆம் தேதி வெளியாகிறது என்ற செய்திதான். பிகில் வரும்போது ஏன் கைதி வருகிறது? அங்குதான் எஸ்.ஆர் பிரபுவின் பிகில் ஐடியா இருக்கிறது என்கிறார்கள். அதாவது ஒவ்வொரு விஜய் ரசிகனும் பிகில் படத்தைப் போலவே கைதி படத்தையும் மாஸாக எதிர்பார்ப்பான். காரணம். கைதி படத்தின் இயக்குநர் தானே விஜய்யின் 64-வது படத்தை இயக்கி வருகிறார். தன் தலைவன் படத்தை இயக்குபவரின் படம் எப்படி இருக்கும்? என்று பார்க்கும் ஆர்வம் ரசிகனுக்கு எழும் தானே!
அதேபோல் பிகில் போடும் கணக்கு என்பது விஜய்யின் முந்தைய படங்களின் வசூல் விபரம். விஸ்வாசம் பேட்ட இரண்டு படங்களும் சேர்ந்து முதல்நாள் ஈட்டிய தொகையை விட அதிகமாக இருந்தது சர்கார் படத்தின் முதல்நாள் வசூல். அதனால் எப்படியும் விஜய் மாஸ் காட்டிவிடுவார் என்று நம்புகிறது தயாரிப்புத் தரப்பு. காத்திருப்போம்