ப்ளாஸ்ட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் அர்ஜுன் ஒரு முழுநீள ஆக்சன் படத்தில் நடித்துள்ளார். முக்கியக்குறிப்பு தன்னைவிட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் படத்தில் கொடுத்து நடித்துள்ளார்.

ஒரு பெரிய கார்ப்பரேட் வில்லன். 7000 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்தையே அழிக்க நினைக்கிறான். அதற்காக அரசியல்வாதி ஒருவருக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயற்சிக்கிறான். அந்தப் ப்ராசஸ் நடக்கும் போது, அந்த வில்லன் டீமிற்கும் அர்ஜுன் மகளான ஹீரோயின் ப்ரீத்தி முகந்தனுக்கு முட்டல் வருகிறது. இம்மாம் பெரிய கார்ப்பரேட் வில்லனை எளிய பின்னணியுள்ள அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா எப்படிச் சமாளித்தார்கள் என்பதே படத்தின் கதை

ஆக்சன் கிங் அர்ஜுன் அதே எனர்ஜியோடு திரையெங்கும் அதகளம் செய்துள்ளார். அப்படியே அர்ஜுனின் லேடிவெர்சன் போல படத்தில் மிரட்டியுள்ளார் நாயகி ப்ரீத்தி முகுந்தன். சண்டைக்காட்சிக்காக அவர் போட்டுள்ள உழைப்பு பாராட்டத்தக்கது. அபிராமி காட்சியுள்ள ஸ்டன்ஸும் வேறலெவல் எனலாம். விவேக் பிரசன்னாவும் சண்டைக்காட்சிகளில் தூள் பரத்தியுள்ளார்..வில்லன் ஜான் கொகேன் உள்பட படத்தில் வரும் இன்னபிற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்

அசோக் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா எக்ஸ்ட்ரா வொர்க் செய்துள்ளது கிரேட்! ரவிஅசூர் இசையால் பெரிய மேஜிக்-ஐ நிகழ்த்தியுள்ளார். பின்னணி இசையை படத்தின் இன்னொரு ஹீரோ எனலாம். சண்டைக்காட்சியை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு படத்தின் ரியல் பிளாஸ்டர் சம்பவக்காரர்

படம் ஆரம்பத்திலிருந்தே தொய்வின்றி பயணிக்கிறது. ஆனால் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள். But அவற்றை எல்லாம் மறக்கச் செய்கிறது படத்தின் மேக்கிங். சண்டைக்காட்சிகளை அதிகம் விரும்பும் நபராக நீங்களிருந்தால் இந்தப்படம் உங்களுக்கானதே
3/5