”நான் பேசும் அரசியல் தான் நான்” -பா.ரஞ்சித்!

Get real time updates directly on you device, subscribe now.

லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருதிவி பாண்டியராஜ், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன், கலை இயக்குநர் ஜெயரகு, படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா வசனகர்த்தா தமிழ்பிரபா, பாடலாசிரியர் அறிவு, சண்டைப்பயிற்சி இயக்குநர் STUNNER சாம், நடன இயக்குநர் ஸ்ரீக்ரிஷ் ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சவுண்ட் டிசைனர் சுரேன்.ஜி, விளம்பர வடிவமைப்பாளர் கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 12

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் பேசும் போது,

இந்த அரசியலும் நான் நம்புகிறத் தத்துவமும் என்னை சரியாக வழிநடத்தும் என்று நம்புகிறேன்.. யாரைத் தேடியும் நான் சென்றதே இல்லை. நான் பேசுகின்ற அரசியல் நிறைய பேரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது. என்னையும் நான் பேசும் அரசியலையும் நம்புகிற ஒருவர் மட்டும் தான் என்னுடன் சேர்ந்து பணியாற்ற முடியும்… பிற ஆட்கள் என்னுடன் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் நான் வெளிப்படையாக இருக்கிறேன். அதே வெளிப்படைத்தன்மையுடன் என் அரசியலைப் புரிந்து கொண்டு என்னுடன் பயணிப்பவர்கள் தான் இந்த மேடையில் இருப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தயாரிப்பாளர்கள் கணேஷ மூர்த்தி சவுந்தர்யா இருவரும் வேறொரு நிலப்பரப்பில் இருந்து வேறொரு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் வந்தவர்கள். ஆனால் நாம் பேசும் அரசியலை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அது சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தயாரித்து வரும் பிற படங்களும் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.