குழந்தைகளை கவர வரும் ”புரூஸ் லீ : ரூட்டை மாற்றினார் ஜி.வி.பிரகாஷ்

Get real time updates directly on you device, subscribe now.

gv

‘டேவிட் புள்ள’ என்றாலே ஞாபகத்துக்கு வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.

அந்தப் படத்தில் இளைஞர் பட்டாளத்தை கவர்ந்தவர் தனது புதிய படமான ‘புரூஸ் லீ’ யில் குழந்தைகளை கவரப் போகிறாராம்.

கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் தான் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார், நாயகியாக கீர்த்தி கர்பந்தனா நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாகப் போகிறது. மேலும் இதில் பாலா சரவணன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

‘புரூஸ் லீ’ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் ‘இது நம்ம ஆளு’ ‘ஹைக்கூ’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் பாண்டிராஜ். குழந்தைகளை மையமாக கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாண்டிராஜிடம் இருந்து வந்துள்ள பிரஷாந்த் பாண்டிராஜ் தற்போது இயக்கவுள்ள புரூஸ் லீ திரைப்படமும் குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்படவுள்ள லாப்ஸ்டர் வகையிலான ஆக்‌ஷன் திரைப்படம்.

ஹாரர், கல்ட் என்று வெவ்வேறு வகையிலான களங்களில் பயணித்து கொண்டு இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு இந்த படம் மிகவும் புதுமையான ஒரு படமாக இருக்கும் என்றும். ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையில் முதன் முறையாக நாம் இந்த படத்தில் அவரை பார்க்கலாம் என்றும் கூறுகிறார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்.

‘புரூஸ் லீ’ படத்தின் படத்தின் படபிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.