தேஜாவு- விமர்சனம்
திரில்லர் படங்களுக்கு முக்கியத்தேவை திரைக்கதை. அதைச் சரியாக அமைத்துவிட்டால் படம் சரியாக அமைந்துவிடும். அந்த வகையில் முதல் படத்திலே திரைக்கதை அமைப்பில் கவனம் ஈர்த்துள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாசன்
டி.ஜி.பி மதுபாலாவின் மகள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபுடிக்கும் அண்டர்கவர் ஆபிசராக வருகிறார் அருள்நிதி. மேலும் இந்த வழக்க்கும், அச்யத்குமார் எழுதும் கதையும் ஓரிடர்த்தில் இணைகிறது. இவைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களே தேஜாவு படத்தின் கதை
நாயகனாக அருள்நிதி தன் நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். சில இடங்களில் தான் தேவையை விட அதிகமாக சோல்டரை உயர்த்துகிறார். மதுபாலா இந்தப்படத்தில் ஒட்டாத இடத்தில் இருக்கிறார். டி.ஜி.பிக்கான கம்பீரம் அவரிடம் துளியும் வரவில்லை. இந்தப்பட நடிகர்களில் மதுபாலா கேரக்டர் வடிவம் மட்டுமே சொதப்பியுள்ளது. மற்றபடி அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்
பி.ஜி முத்தையா தன் கேமராவின் வழியே ஒரு திரில்லர் படத்திற்கான டெப்த்தை கொடுத்துள்ளார். ஜிப்ரான் இசை படத்தின் பலத்தை மேலும் கூட்டியிருக்கிறது
படத்தின் பிரதான கதாப்பாத்திரம் நம்மோடு ஒட்டாத காரணத்தால் படம் சில இடங்களில் நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது. சொல்ல வந்த விசயத்தில் இன்னுமே கூட அழுத்தம் சேர்த்திருக்கலாம். இருந்தாலும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை க்ளைமாக்ஸ் வரைக்கும் தக்க வைத்திருப்பதால் தேஜாவு படத்தை பார்க்கலாம்
3/5