ZEE5ல் செப்டம்பர் 27ல் டிமான்ட்டி காலனி 2!

Get real time updates directly on you device, subscribe now.

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், திரையரங்கில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல், அதன் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது. பிடிஜி யுனிவர்சல் பாபி பாலச்சந்திரன், ஞானமுத்து பட்டரை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில்,  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள  இத்திரைப்படத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Posts
1 of 8

இத்திரைப்படம் ZEE5 தமிழில் வெளியாவதற்கு முன்னதாகவே, புதிய சாதனையைப் படைத்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ், காதர் பாட்ஷா, அயோத்தி & அகிலன் போன்ற முந்தைய வெற்றிப்படங்களைத் தாண்டி,  அதிக முன் சந்தாக்களைக் குவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கரின் கலக்கலான நடிப்பில்,  அட்டகாசமான  ஹாரர் அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையிடப்படும், டிமான்ட்டி காலனி 2 அதன் அசல் தமிழ் பதிப்பிலும், தெலுங்கு-டப்பிங் பதிப்பிலும் கிடைக்கும், பரந்த அளவில் அனைத்து  பார்வையாளர்களும்  இப்படத்தை ரசிக்க முடியும்.
உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், செப்டம்பர் 27 ஆம் தேதி ‘டிமான்ட்டி காலனி 2’ உங்கள் ZEE5 இல் பிரத்தியேகமாக அதிரடிகள் நிறைந்த ரோலர்கோஸ்டர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்!