நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டம் – வழக்கம் போல வீட்டிலேயே செட்டில் ஆன அஜீத்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், ஜி.வி.பிரகாஷ் குமார் என பெரும்பாலான முன்னணி நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஆனால், எல்லோராலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட முன்னணி நடிகரான அஜீத் வழக்கம் போல இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு படப்பிடிப்பும் இல்லாததால் வீட்டிலேயே செட்டிலாகி விட்டார்.
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அஜீத் சங்கத்தின் தேர்தல் நடந்தபோது வாக்களிக்க வரவில்லை. நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையிலும் கலந்து கொள்ளவில்லை. இப்படி திரையுலகின் பிரச்சனைகளில் தான் கலந்து கொள்ளவில்லை.
அதற்காக காவேரி, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் கூடவா கலந்து கொள்ளக்கூடாது என்று திரையுலகினர் அஜீத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.