நாய் தாங்க ஹீரோ! – தமிழில் வரப்போகும் அசத்தலான அட்வென்சர் படம்.!

Get real time updates directly on you device, subscribe now.

ந்திய சினிமாவில் இதுவரை பல விதமான ரசனை கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. யானை, குரங்கு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளை வைத்தும் தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் விலங்குகளை மட்டுமே மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் தயாராகி இருந்தன. இந்நிலையில் தற்போது அப்படியாக ஒரு படம் தமிழ் சினிமாவில் தயாராக உள்ளது.

ஒரு நாயை தனித்துவமாக வைத்து தயாராகும் இந்த படத்தை ‘உறுமீன்’ பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்போடு வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராக உள்ளதாகவும் குழந்தைகள் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.